தமிழ் வினா விடை :
51.உலகில் ஏற்றத்தாழ்வற்ற ......................... அமைய வேண்டும்?
விடை: சமூகம்
52. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு .................... ஆக இருக்கும்?
விடை: அசதி
53. நிலவு+ என்று என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்...................
விடை: நிலவென்று
54. தமிழ் + எங்கள் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்..................
விடை: தமிழெங்கள்
55. அமுதென்று என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது....................
விடை: அமுது + என்று
56. செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது..................
விடை: செம்மை+ பயிர்
57. பாரதிதாசனின் இன்பத் தமிழ் எனும் பாடலின் கருத்துக்கு ஏற்ற படி பொருத்தம்.
விளைவுக்கு - நீர்
அறிவுக்கு - தோள்
இளமைக்கு - பால்
புலவருக்கு - வேல்
58. தமிழ் மொழியில் படித்தால் ...................அடையலாம்.
விடை: மேன்மை
59. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால்................. சுருங்கிவிட்டது.
விடை: மேதினி
60. செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது....................
விடை: செம்மை + தமிழ்
61. பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது...................
விடை: பொய் + அகற்றும்
62. பாட்டு + இருக்கும் என்பதைச் சேர்த்து எழுத கிடைப்பது..................
விடை: பாட்டிருக்கும்
63. எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுத கிடைப்பது...................
விடை: எட்டுத்திசை
64. இடப்புறம் என்ற சொல்லைப் பிரிக்கத் கிடைக்கும் சொல்....................
விடை: இடது + புறம்
65. சீரிளமை என்ற சொல்லைப் பிரிக்க கிடைக்கும் சொல்..................
விடை: சீர்+ இளமை
66. சிலம்பு +அதிகாரம் என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்..................
விடை: சிலப்பதிகாரம்
67. கணினி + தமிழ் என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
விடை: கணினித்தமிழ்
68. தமிழ்மொழியின் இலக்கண வகைகள் எத்தனை?
விடை: 5 (எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம்)
69. ஒலி வடிவாக எழுப்பப்படுவதும் வரி வடிவாக எழுதப்படுவதும் எது?
விடை: எழுத்து
70.இயல்பாகக் காற்று வெளிப்படும் போது பிறக்கும் எழுத்துக்கள் என்ன?
விடை: உயிர் எழுத்துக்கள்
71. இலக்கணத்தில் மாத்திரை என்பது எதனைக் குறிக்கும்?
விடை: கால அளவை
72. குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு என்ன?
விடை: ஒரு மாத்திரை
73. நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு என்ன?
விடை: இரண்டு மாத்திரை
74.வல்லின மெய்கள் எத்தனை?
விடை: ஆறு. (க் ச் ட் த் ப் ற் )
75. மெல்லின மெய்கள் எத்தனை?
விடை: ஆறு ( ங் ஞ் ண் ந் ம் ன் )
76. இடையின மெய்கள் எத்தனை ?
விடை: 6 (ய் ர் ல் வ் ழ் ள்)
77. மெய் எழுத்துக்கள் பதினெட்டுடன் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றும் எழுத்துக்கள் எவை?
விடை: உயிர்மெய் எழுத்துக்கள்
78. மெய்யுடன் உயிர்க்குறில் சேர்வதால் தோன்றும் எழுத்து எது?
விடை: உயிர்மெய்க் குறில்
79. மெய்யுடன் உயிர்நெடில் சேர்ந்தால் தோன்றும் எழுத்து எது?
விடை: உயிர்மெய் நெடில்
80. உயிர் எழுத்துக்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
விடை: இரண்டு
குறிப்பு: பிழைகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தெரிவிக்கவும்
Questions and Answers for TNPSC , TET , POLICE Exams