Monday, 30 March 2020

TNPSC ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 1 தொடர்ச்சி

தமிழ்  வினா விடை :


26.'நன்னூல்' எத்தன்மையான நூல்?

விடை: இலக்கண நூல்

27.சங்க இலக்கிய நூல்கள் யாவை?
விடை: எட்டுத்தொகை பத்துப்பாட்டு

28.'மா' என்னும் ஒரு சொல்லின் பல பொருள்கள் எவை?
விடை:மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், மேன்மை, துகள், வயல், வண்டு.

29.எண்ணத்தை வெளிப்படுத்தும் தமிழ் எது?
விடை: இயல் தமிழ்

30.உள்ளத்தை மகிழ்விக்கும் தமிழ் எது?
விடை: இசைத்தமிழ்

31. உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்தும் தமிழ் எது?
விடை: நாடகத் தமிழ்

32. துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள் இவை எவ்வகை வடிவங்கள்?
விடை: தமிழ் கவிதை வடிவங்கள்

33. கட்டுரை, புதினம், சிறுகதை இவை எவ்வகை வடிவங்கள்?
விடை: உரைநடை வடிவங்கள்

34. தமிழ் வரி வடிவ எழுத்துக்கள் எவ்வகை நோக்கில் உருவாக்கப்பட்டவை?
விடை: அறிவியல் தொழில்நுட்ப நோக்கம்

35.மொழியை கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது எந்த அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்?
விடை: எண்களின் அடிப்படையில்

36. 'தொன்மை' எனும் சொல்லின் பொருள் யாது?
விடை: பழமை

37. 1 2 3 என்ற ரோமங்களின் தமிழ் எண் எது?
விடை: க  

38. "தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாடியவர் யார்?
விடை: பாரதியார்

39. பூவின் ஏழு நிலைகள் யாது?
விடை: அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்.

40. உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்திக் கூறியவர் யார்?
விடை: தொல்காப்பியர்

41. 'கடல் நீர் ஆவியாகி மழையாக பொழியும்' எனக் கூறிய இலக்கிய நூல்கள் யாவை?
விடை: முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது, திருப்பாவை

42. 'ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் 
       நாழி முகவாது நால்நாழி' என்ற பாடலை எழுதியவர் யார்?
விடை: ஒளவையார்

43. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தியைக் கூறும் இலக்கிய நூல் எது?
விடை: பதிற்றுப்பத்து

44. 'திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவை சுருக்க முடியாது' என்ற அறிவியல் கருத்தை கூறிய ஆசிரியர் யார்?
விடை: ஔவையார்

45. சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தியை கூறிய இலக்கிய நூல் எது?
விடை: நற்றிணை

46. தொலைவிலுள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்ற செய்ய முடியும் என்ற கருத்தை கூறிய அறிவியல் அறிஞர் யார்?
விடை: கலீலியோ

47. 'திருவள்ளுவமாலை' என்ற நூலின் ஆசிரியர் யார்?
விடை: கபிலர்

48. 'தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட
    பனையளவு காட்டும்' என்ற அறிவியல் செய்தியைக் கூறிய தமிழ் இலக்கிய நூல் எது? 
விடை: திருவள்ளுவமாலை

49. இஸ்ரோவின் தலைவர் யார்?
விடை: சிவன்

50. மயில்சாமி அண்ணாதுரை எந்த துறையை சார்ந்தவர்?
விடை: இஸ்ரோவின் அறிவியல் அறிஞர்


குறிப்பு: பிழைகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தெரிவிக்கவும்


Questions and Answers for TNPSC , TET , POLICE Exams

4 comments: