Monday, 30 March 2020

TNPSC ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 1

தமிழ்  வினா விடை :

1. 'தமிழுக்கும் அமுதென்று பேர்' என தொடங்கும் இன்பத்தமிழ் பாடலின் ஆசிரியர் யார்?
விடை: பாரதிதாசன்

2. தமிழ் எங்கள் அறிவுக்குத் துணை கொடுக்கும் தோள் போன்றது எனக் கூறியவர் யார்?
விடை: பாரதிதாசன்

3. பாரதிதாசனின் இயற்பெயர் யாது?
விடை: சுப்பு ரத்தினம்

4. 'புரட்சிக்கவி' என அழைக்கப்படுபவர் யார்?
  விடை: பாரதிதாசன்

5. 'பாவேந்தர்' எனப் போற்றப்படும் கவிஞர் யார்?
விடை: பாரதிதாசன்

6. சமூகம் என்பதன் பொருள் என்ன?
விடை: மக்கள் குழு

7. தமிழ் கும்மி பாடலின் ஆசிரியர் யார்?
விடை: பெருஞ்சித்திரனார்

8.'எட்டுத்திசையிலும் செந்தமிழின் புகழ் 
எட்டிடவே கும்மி கொட்டுங்கடி' -என்ற பாடல் வரிகளை எழுதிய கவிஞர் யார்?
விடை: பெருஞ்சித்திரனார்

9. ஆழிப்பெருக்கு என்பதன் பொருள் என்ன?
விடை: கடல்கோள்

10. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
விடை: மாணிக்கம்

11.'பாவலரேறு' என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?
 விடை: பெருஞ்சித்திரனார்

12. 'கனிச்சாறு' என்னும் நூலின் ஆசிரியர் யார்?
 விடை: பெருஞ்சித்திரனார்

13.'கொய்யாக்கனி' என்னும் நூலின் ஆசிரியர் யார்?
விடை: பெருஞ்சித்திரனார்

14 'பாவியக்கொத்து' எனும் நூலின் ஆசிரியர் யார்?
விடை: பெருஞ்சித்திரனார்

15. 'நூறாசிரியம்' எனும் நூலின் ஆசிரியர் யார்?
 விடை: பெருஞ்சித்திரனார்

16. பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்களின் பெயர்கள் என்ன?
விடை: தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்.

17. மனித இனம் கண்டறிந்த மிகச்சிறந்த கண்டுபிடிப்பு எது?
விடை: மொழி

18. மனிதரைப் பிற உயிரினங்களிடமிருந்து வேறுபடுத்தியும் மேம்படுத்தியும் காட்டுவது எது?
விடை: மொழி

19."யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
 இனிதாவது எங்கும் காணோம்" என தமிழ் மொழியின் இனிமையை வியந்து பாடிய கவிஞர் யார்?
 விடை: பாரதியார்

20.'என்று பிறந்தவள் என்று உணராத 
இயல்பினளாம் எங்கள் தாய்' - என்று தமிழ் தாயின் தொன்மையைப் பாடிய கவிஞர் யார்?
விடை: பாரதியார்

21.தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் எது? விடை: தொல்காப்பியம்

22. வலஞ்சுழி எழுத்துக்கள் யாவை?
விடை: அ, எ, ஔ, ண, ஞ

23. இடஞ்சுழி எழுத்துக்கள் யாவை?
விடை: ட ய ழ 

24. ஒழுங்கு முறையைக் குறிக்கும் சொல் எது?
விடை: சீர்மை

25. தமிழில் திணைகளை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்? 
விடை: இரண்டு (2)


குறிப்பு: பிழைகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தெரிவிக்கவும்


Questions and Answers for TNPSC , TET , POLICE Exams 

1 comment:

  1. சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்...

    ReplyDelete