Thursday, 2 April 2020

TNPSC ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 2

தமிழ்  வினா விடை :

81. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
விடை: இளங்கோவடிகள்

82. 'அளி' என்னும் சொல்லின் பொருள் யாது?
விடை: கருணை

83. தமிழின் முதல் காப்பியம் எது?
விடை: சிலப்பதிகாரம்

84. சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள் யாவை?
விடை: முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம்

85 இரட்டை காப்பியங்கள் எவை?
விடை: சிலப்பதிகாரம், மணிமேகலை

86. சோழ மன்னனுக்கு உரிய பூ எது?
விடை: ஆத்தி பூ

87. 'திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்' என்னும் பாடலடியை கொண்ட இலக்கியம் எது?
விடை: சிலப்பதிகாரம்

88. 'மேரு' என்பது எம்மலையைக் குறிக்கும் குறிக்கும்?
விடை: இமயமலை

89. 'தார் ' என்பதன் பொருள் யாது?
விடை: மாலை

90. கதிரவனின் மற்றொரு பெயர் என்ன?
விடை: ஞாயிறு

91. வெண்குடை என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது.....................
விடை: வெண்மை + குடை

92. பொற்கோட்டு என்னும் சொல்லை பிரித்து எழுத  கிடைப்பது.....................
விடை: பொன்+ கோட்டு

93. கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்................‌‌...
விடை: கொங்கலர்

94. அவன் + அளிபோல் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்..................
விடை: அவனளிபோல்

95. 'திகிரி' என்பதன் பொருள் என்ன?
விடை: ஆணைச்சக்கரம்

96. பாரதியாரின் இயற்பெயர் யாது?
விடை: சுப்பிரமணியன்

97. பாரதியாரின் முப்பெரும் காப்பியங்கள் எவை?
விடை: கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்.

98. பாரதியாருக்கு 'பாரதி' என்னும் பட்டம் வழங்கி சிறப்பித்தவர் யார்?
விடை: எட்டயபுர மன்னர்

99. 'காணி' என்பது எதனைக் குறிக்கும் சொல்?
விடை: நில அளவைக் குறிக்கும் சொல்

100. 'கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதில் படவேணும்' - என்று பாடிய கவிஞர் யார்?
விடை: பாரதியார்

101. 'காணிநிலம்' பாடலின் ஆசிரியர் யார்?
விடை: பாரதியார்

102. 'கேணி' என்பதன் பொருள் யாது?
விடை: கிணறு

103. 'மாடங்கள்' என்பதன் பொருள் என்ன?
விடை: மாளிகையின் அடுக்குகள்

104. 'நன்மாடங்கள்' என்னும் சொல்லை பிரிக்க கிடைக்கும் சொல்..................
விடை: நன்மை + மாடங்கள்

105. 'நிலத்தினிடையே' என்னும் சொல்லை பிரிக்க கிடைக்கும் சொல் எது?
விடை: நிலத்தின் + இடையே

106. கலைச்சொல்: வலஞ்சுழி-clockwise

107. கலைச்சொல்: இடஞ்சுழி-Anti clockwise

108. ஆய்த எழுத்தை ஒலிக்கும் கால அளவு என்ன?
விடை: அரை மாத்திரை

109.கலைச்சொல்: தொடுதிரை-Touch screen

110. கலைச்சொல்: தேடுபொறி- Search Engine.

குறிப்பு: பிழைகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தெரிவிக்கவும்

Tuesday, 31 March 2020

ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 1 தொடர்ச்சி (2)


தமிழ்  வினா விடை :

51.உலகில் ஏற்றத்தாழ்வற்ற ......................... அமைய வேண்டும்?
விடை: சமூகம்

52. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு .................... ஆக இருக்கும்?
விடை: அசதி

53. நிலவு+ என்று என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்...................
விடை: நிலவென்று

54. தமிழ் + எங்கள் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்..................
விடை: தமிழெங்கள்

55. அமுதென்று என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது....................
விடை: அமுது + என்று

56. செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது..................
விடை: செம்மை+ பயிர்

57. பாரதிதாசனின் இன்பத் தமிழ் எனும் பாடலின் கருத்துக்கு ஏற்ற படி பொருத்தம்.
      விளைவுக்கு      -   நீர்
      அறிவுக்கு           -   தோள்
      இளமைக்கு        -   பால்
      புலவருக்கு        -   வேல்

58. தமிழ் மொழியில் படித்தால் ...................அடையலாம்.
விடை: மேன்மை

59. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால்................. சுருங்கிவிட்டது.
விடை: மேதினி

60. செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது....................
விடை: செம்மை + தமிழ்

61. பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது...................
விடை: பொய் + அகற்றும்

62. பாட்டு + இருக்கும் என்பதைச் சேர்த்து எழுத கிடைப்பது..................
விடை: பாட்டிருக்கும்

63. எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுத கிடைப்பது...................
விடை: எட்டுத்திசை

64. இடப்புறம் என்ற சொல்லைப் பிரிக்கத் கிடைக்கும் சொல்....................
விடை: இடது + புறம்

65. சீரிளமை என்ற சொல்லைப் பிரிக்க கிடைக்கும் சொல்..................
விடை: சீர்+ இளமை

66. சிலம்பு +அதிகாரம் என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்..................
விடை: சிலப்பதிகாரம்

67. கணினி + தமிழ் என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
விடை: கணினித்தமிழ்

68. தமிழ்மொழியின் இலக்கண வகைகள் எத்தனை?
விடை:  5 (எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம்)

69. ஒலி வடிவாக எழுப்பப்படுவதும் வரி வடிவாக எழுதப்படுவதும் எது?
விடை: எழுத்து

70.இயல்பாகக் காற்று வெளிப்படும் போது பிறக்கும் எழுத்துக்கள் என்ன?
விடை: உயிர் எழுத்துக்கள்

71. இலக்கணத்தில் மாத்திரை என்பது எதனைக் குறிக்கும்?
விடை: கால அளவை

72. குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு என்ன?
விடை: ஒரு மாத்திரை

73. நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு என்ன?
விடை: இரண்டு மாத்திரை

74.வல்லின மெய்கள் எத்தனை?
விடை: ஆறு.  (க் ச் ட் த் ப் ற் )

75. மெல்லின மெய்கள் எத்தனை?
விடை: ஆறு ( ங் ஞ் ண் ந் ம் ன் )

76. இடையின மெய்கள் எத்தனை ?
விடை:  6 (ய் ர் ல் வ் ழ் ள்)

77. மெய் எழுத்துக்கள் பதினெட்டுடன் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றும் எழுத்துக்கள் எவை?
விடை: உயிர்மெய் எழுத்துக்கள்

78. மெய்யுடன் உயிர்க்குறில் சேர்வதால் தோன்றும் எழுத்து எது?
விடை: உயிர்மெய்க் குறில்

79. மெய்யுடன் உயிர்நெடில் சேர்ந்தால் தோன்றும் எழுத்து எது?
விடை: உயிர்மெய் நெடில்

80. உயிர் எழுத்துக்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
விடை: இரண்டு

குறிப்பு: பிழைகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தெரிவிக்கவும்



Questions and Answers for TNPSC , TET , POLICE Exams

Monday, 30 March 2020

TNPSC ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 1 தொடர்ச்சி

தமிழ்  வினா விடை :


26.'நன்னூல்' எத்தன்மையான நூல்?

விடை: இலக்கண நூல்

27.சங்க இலக்கிய நூல்கள் யாவை?
விடை: எட்டுத்தொகை பத்துப்பாட்டு

28.'மா' என்னும் ஒரு சொல்லின் பல பொருள்கள் எவை?
விடை:மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், மேன்மை, துகள், வயல், வண்டு.

29.எண்ணத்தை வெளிப்படுத்தும் தமிழ் எது?
விடை: இயல் தமிழ்

30.உள்ளத்தை மகிழ்விக்கும் தமிழ் எது?
விடை: இசைத்தமிழ்

31. உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்தும் தமிழ் எது?
விடை: நாடகத் தமிழ்

32. துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள் இவை எவ்வகை வடிவங்கள்?
விடை: தமிழ் கவிதை வடிவங்கள்

33. கட்டுரை, புதினம், சிறுகதை இவை எவ்வகை வடிவங்கள்?
விடை: உரைநடை வடிவங்கள்

34. தமிழ் வரி வடிவ எழுத்துக்கள் எவ்வகை நோக்கில் உருவாக்கப்பட்டவை?
விடை: அறிவியல் தொழில்நுட்ப நோக்கம்

35.மொழியை கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது எந்த அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்?
விடை: எண்களின் அடிப்படையில்

36. 'தொன்மை' எனும் சொல்லின் பொருள் யாது?
விடை: பழமை

37. 1 2 3 என்ற ரோமங்களின் தமிழ் எண் எது?
விடை: க  

38. "தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாடியவர் யார்?
விடை: பாரதியார்

39. பூவின் ஏழு நிலைகள் யாது?
விடை: அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்.

40. உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்திக் கூறியவர் யார்?
விடை: தொல்காப்பியர்

41. 'கடல் நீர் ஆவியாகி மழையாக பொழியும்' எனக் கூறிய இலக்கிய நூல்கள் யாவை?
விடை: முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது, திருப்பாவை

42. 'ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் 
       நாழி முகவாது நால்நாழி' என்ற பாடலை எழுதியவர் யார்?
விடை: ஒளவையார்

43. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தியைக் கூறும் இலக்கிய நூல் எது?
விடை: பதிற்றுப்பத்து

44. 'திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவை சுருக்க முடியாது' என்ற அறிவியல் கருத்தை கூறிய ஆசிரியர் யார்?
விடை: ஔவையார்

45. சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தியை கூறிய இலக்கிய நூல் எது?
விடை: நற்றிணை

46. தொலைவிலுள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்ற செய்ய முடியும் என்ற கருத்தை கூறிய அறிவியல் அறிஞர் யார்?
விடை: கலீலியோ

47. 'திருவள்ளுவமாலை' என்ற நூலின் ஆசிரியர் யார்?
விடை: கபிலர்

48. 'தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட
    பனையளவு காட்டும்' என்ற அறிவியல் செய்தியைக் கூறிய தமிழ் இலக்கிய நூல் எது? 
விடை: திருவள்ளுவமாலை

49. இஸ்ரோவின் தலைவர் யார்?
விடை: சிவன்

50. மயில்சாமி அண்ணாதுரை எந்த துறையை சார்ந்தவர்?
விடை: இஸ்ரோவின் அறிவியல் அறிஞர்


குறிப்பு: பிழைகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தெரிவிக்கவும்


Questions and Answers for TNPSC , TET , POLICE Exams

TNPSC ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 1

தமிழ்  வினா விடை :

1. 'தமிழுக்கும் அமுதென்று பேர்' என தொடங்கும் இன்பத்தமிழ் பாடலின் ஆசிரியர் யார்?
விடை: பாரதிதாசன்

2. தமிழ் எங்கள் அறிவுக்குத் துணை கொடுக்கும் தோள் போன்றது எனக் கூறியவர் யார்?
விடை: பாரதிதாசன்

3. பாரதிதாசனின் இயற்பெயர் யாது?
விடை: சுப்பு ரத்தினம்

4. 'புரட்சிக்கவி' என அழைக்கப்படுபவர் யார்?
  விடை: பாரதிதாசன்

5. 'பாவேந்தர்' எனப் போற்றப்படும் கவிஞர் யார்?
விடை: பாரதிதாசன்

6. சமூகம் என்பதன் பொருள் என்ன?
விடை: மக்கள் குழு

7. தமிழ் கும்மி பாடலின் ஆசிரியர் யார்?
விடை: பெருஞ்சித்திரனார்

8.'எட்டுத்திசையிலும் செந்தமிழின் புகழ் 
எட்டிடவே கும்மி கொட்டுங்கடி' -என்ற பாடல் வரிகளை எழுதிய கவிஞர் யார்?
விடை: பெருஞ்சித்திரனார்

9. ஆழிப்பெருக்கு என்பதன் பொருள் என்ன?
விடை: கடல்கோள்

10. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
விடை: மாணிக்கம்

11.'பாவலரேறு' என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?
 விடை: பெருஞ்சித்திரனார்

12. 'கனிச்சாறு' என்னும் நூலின் ஆசிரியர் யார்?
 விடை: பெருஞ்சித்திரனார்

13.'கொய்யாக்கனி' என்னும் நூலின் ஆசிரியர் யார்?
விடை: பெருஞ்சித்திரனார்

14 'பாவியக்கொத்து' எனும் நூலின் ஆசிரியர் யார்?
விடை: பெருஞ்சித்திரனார்

15. 'நூறாசிரியம்' எனும் நூலின் ஆசிரியர் யார்?
 விடை: பெருஞ்சித்திரனார்

16. பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்களின் பெயர்கள் என்ன?
விடை: தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்.

17. மனித இனம் கண்டறிந்த மிகச்சிறந்த கண்டுபிடிப்பு எது?
விடை: மொழி

18. மனிதரைப் பிற உயிரினங்களிடமிருந்து வேறுபடுத்தியும் மேம்படுத்தியும் காட்டுவது எது?
விடை: மொழி

19."யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
 இனிதாவது எங்கும் காணோம்" என தமிழ் மொழியின் இனிமையை வியந்து பாடிய கவிஞர் யார்?
 விடை: பாரதியார்

20.'என்று பிறந்தவள் என்று உணராத 
இயல்பினளாம் எங்கள் தாய்' - என்று தமிழ் தாயின் தொன்மையைப் பாடிய கவிஞர் யார்?
விடை: பாரதியார்

21.தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் எது? விடை: தொல்காப்பியம்

22. வலஞ்சுழி எழுத்துக்கள் யாவை?
விடை: அ, எ, ஔ, ண, ஞ

23. இடஞ்சுழி எழுத்துக்கள் யாவை?
விடை: ட ய ழ 

24. ஒழுங்கு முறையைக் குறிக்கும் சொல் எது?
விடை: சீர்மை

25. தமிழில் திணைகளை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்? 
விடை: இரண்டு (2)


குறிப்பு: பிழைகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தெரிவிக்கவும்


Questions and Answers for TNPSC , TET , POLICE Exams